Photo: Facebook/ Kandy Esala Perahera 2K21
கண்டி எசல பெரஹராவில் கலந்துகொள்ளும் ‘நெடுங்கமுவே ராஜா’ என்றழைக்கப்படும் யானை விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் நெடுங்கமுவயில் இருந்து நடை பயணமாக கண்டி நோக்கி செல்கின்றது.
வருடாந்தம் நடைபெறும் கண்டி எசல பெரஹராவில் புனித சின்னங்களை சுமந்து செல்லும் பிரதான யானையாக இது விளங்குகிறது.
இதன்படி, யானையை ஒவ்வொரு வருடமும் கம்பஹா நெடுங்கமுவ பிரதேசத்தில் இருந்து நடை பயணமாக அதன் பாகன் கண்டிக்கு அழைத்துச் செல்வார்.
கொவிட் நிலைமைக்கு மத்தியில் விசேட பாதுகாப்புகளுடன் நேற்று கண்டி நோக்கிய நடை பயணத்தை ‘நெடுங்கமுவே ராஜா” ஆரம்பித்தது.
67 வயதுடைய ராஜா, தெற்காசியாவில் உள்ள உயரமான யானைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.