January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு இராணுவத் தளபதி தலைமையில் நிதியுதவி

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, யுத்தம் முடிந்தபின் அரசாங்கத்திடம் சரணடைந்து, நீண்ட காலமாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களுக்கு யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பங்கேற்புடன் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது

யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் முயற்சியின் பயனாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் தியாகேந்திரனின் நிதிப் பங்களிப்பில் 15 முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டது.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் தியாகேந்திரனின் நிதி பங்களிப்பில் இந்த உதவித் திட்டம் செயற்படுத்தப்பட்டது.

உதவித்தட்டம் வழங்கும் நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, பலாலி இராணுவ கட்டளை தலைமையக உயரதிகாரிகள், யாழ். இராணுவ படைப்பிரிவுகளின் தளபதிகள் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.