January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தேசிய பட்டியலில் பெண்களுக்கு 50 வீத பிரதிநிதித்துவம் வேண்டும்’: பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கையின் பாராளுமன்ற தேசிய பட்டியலில் பெண்களுக்கு 50 வீத பிரதிநிதித்துவம் வேண்டும் என்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.

தேர்தல் முறை சீர்திருத்தம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் இதனை முன்மொழிந்துள்ளது.

பிரதேச சபை மற்றும் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 30 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு வேட்புமனு கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், சமூகத்தில் பெண்கள் குறித்த கண்ணோட்டம் மாற வேண்டும் என்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.