
இலங்கையின் சில பிரதேசங்களில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்று எச்சரிக்கும் வகையில் வெளியாகியுள்ள ஒலிப் பதிவு உண்மைக்குப் புறம்பானது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மிரிhன, நுகேகொட, கல்கிஸ்ஸ, தெஹிவளை, வெல்லவத்தை மற்றும் பம்பலபிடிய பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறலாம் என்று குறித்த போலி ஒலிப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஒரு சிலரால் போலியாக வெளியிடப்பட்ட ஒலிப் பதிவே மீண்டும் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான போலி செய்திகளைப் பகிர்ந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.