January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆடை கொடுத்தது உண்மையென நிரூபித்தால் அமைச்சுப் பதவியை உடனே துறப்பேன்’

கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணொருவருக்கு நான் ஆடைகளை கொண்டு சென்று வழங்கியதாக கூறும் கதையை உண்மையென நிரூபித்தால் எனது அமைச்சுப் பதவியை துறக்கத் தயாராக உள்ளேன்.ஆனால் என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்க முடியாது போனால் பெண்களின் பொருட்கள் உள்ளடங்கிய பொதியை தலையில் சுமந்து கொண்டு சபையில் ஐந்து நிமிடம் நிற்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
.
நான் குறித்த பெண்ணுக்கு ஆடைகளை கொண்டு சென்றேன் என்பதனை நிரூபிக்க முடியுமென்றால் அல்லது என்னுடன் தொடர்புடையவர்கள் அதனை செய்துள்ளதாக நிரூபித்தால் நான் நாளைய தினமே எனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகின்றேன்.

எனக்கு 3 இலட்சத்து 28 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்.நான் வாக்கு எண்ணிக்கையில் கொழும்பில் முதலிடத்தையும், இலங்கையில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளேன்.இதன்படி அந்த மக்களுக்காக நான் பதவி விலக தயார்.இல்லையென்றால் நளீன் பண்டார பதவி விலக வேண்டிய அவசியமில்லை.அவர் பெண்களின் பொருட்களை தலையில் சுமந்து கொண்டு பாராளுமன்ற நுழைவாயிலில் 5 நிமிடங்கள் இருக்குமாறு அவருக்கு சவால் விடுகிக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.