
நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது எனினும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்படி 500 க்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்ற கூடிய திருமண மண்டபங்களில் 150 பேருக்கும், 500க்கும் குறைவானவர்கள் பங்குபற்ற கூடிய திருமண மண்டபங்களில் 100பேருக்கும் அனுமதி வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்து அரச விழாக்களும் செப்டம்பர் 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிட்ட இராணுவ தளபதி, பொது இடங்களில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்கவும், வைரஸ் பரவுவதைத் தடுக்க கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றவும் வலியுறுத்தினார்.