
2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதலில் போது கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியாக கருதப்படும் அலாவுதீன் அஹமட் என்பவரின் தந்தையை விளக்க மறியலில் இருந்து விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான அகமது லெப்பை அலாவுதீன் சுமார் ஒன்றரை ஆண்டுகள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சந்தேக நபருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கான சட்டமா அதிபரின் ஆலோசனையை குற்றப் புலனாய்வு பிரிவு முன்னர் கோரியிருந்தது.
அதன்படி, சந்தேகநபருக்கு எதிராக எந்த ஆதாரமும் முன்வைக்கப்படாததால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறிவித்திருந்தார்.
இதற்கமைய குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமை சந்தேக நபரை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.