கேகாலை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யூ.எல்.எம்.பாரூக் காலமானார்.
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இன்று காலை தனது 80 ஆவது வயதில் காலமானதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
1964 ஆம் ஆண்டு மெகொடபொதபத்துவை கிராம சபைத் தேர்தலில் வெற்றி பெற்று அரசியல் பயணத்தை ஆரம்பித்த பாரூக் பிற்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர், போக்குவரத்து சபை தலைவர், ஜேர்மன் பயிற்சி கல்லூரியின் தலைவர் என பல பதவிகளை வகித்தார்.
1988 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட்ட அவர் கேகாலை மாவட்ட முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை வெற்றி கொண்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். பின்னர் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
காலமான பாரூக்கின் இறுதிக்கிரியை இன்று மாலை கன்னாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.