
இலங்கையில் மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண திஸாநாயக்க, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி ஆகியோருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கொவிட் பரிசோதனைகளை செய்துகொண்ட போது, இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஏற்கனவே அமைச்சர் மகிந்தனந்த அளுத்கமகே கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்
அத்துடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று உறுதியான காரணத்தினால் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதயகம்மன்பில ஆகியோர் சுயதனிமைப்படுத்தலில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.