அஸ்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள பொலிஸ் பயிற்சித் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி நிலையத்தில் அதனை பெற்றுக்கொள்ள முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது தடுப்பூசியை பெற்றுகொண்டபோது வழங்கப்பட்ட தடுப்பூசி பதிவு அட்டை மற்றும் அடையாள அட்டையுடன் சென்று அந்த இடத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியுமென்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அஸ்ரா செனகா தடுப்பூசியின் முதல் டோஸை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெற்றுக்கொண்டவர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டாவது டோஸை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரதான தடுப்பூசி நிலையங்களில் அந்த நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இன்னும் யாரேனும் இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்ளாது இருந்தால் தாமதிக்காது பொலிஸ் பயிற்சி தலைமையகத்திற்கு சென்று அதனை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.