
வாழைச்சேனையில் வர்த்தக நிலையமொன்றுக்கு முன்னால் உரப்பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை சித்தி லைலா பகுதியை சோர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் 28 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழைச்சேனை பொதுச் சந்தையில் அமைந்துள்ள தனது நண்பர் ஒருவரின் கடையொன்றுக்கு முன்னால் சென்றுள்ள குறித்த சந்தேகநபர், அந்த இடத்தில் பொதியொன்றை வைத்து சென்ற நிலையில் அதுகுறித்து சந்தேகம் கொண்ட கடை உரிமையாளர் அதனை சோதனையிட்ட போது அதில் சடலமொன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சந்தேக நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே காணப்பட்ட கொடுக்கல் வாங்கலொன்று தொடர்பில் அந்த நபர் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்து உரைப்பையில் போட்டு குறித்த இடத்தில் வைத்துச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.