July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எந்த தடுப்பூசி சிறந்தது என்ற சான்றிதழை வழங்க முடியாது’

தடுப்பூசிகளின் தரம் குறித்து இறுதியாக்கப்பட்ட தரவுகள் என எதுவுமே இல்லை.அனைத்துமே தற்போதும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் எது சிறந்த தடுப்பூசியென ஒன்றை தெரிவு செய்ய முடியாது என சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையில் பரவிவரும் சகல கொவிட் வைரஸ்களுக்கும் தற்போது நாம் பயன்படுத்தும் தடுப்பூசிகள் அனைத்துமே பலனளிப்பதாக சுகாதார நிபுணர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தெற்காசிய வலயத்தில் மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரிப்பு நிலையொன்றே காணப்படுகின்றது.அதேபோல், இலங்கையிலும் வைரஸ் தொற்றாளர் அதிகரிப்பை காட்டுகின்றது. கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் இரண்டாயிரத்தை தாண்டிய வைரஸ் தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

ஆனால் எப்போது இன்னொரு வைரஸ் அலை உருவாகும் என கூறமுடியாது.தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலமாக மட்டுமே கொவிட் அலை ஏற்படுவதை தவிர்க்க முடியும். கடந்த ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரையில் 21 ஆயிரத்து 344 கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் 591 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.