July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியா மற்றும் சிங்கப்பூரிடம் இருந்து ஒட்சிசனை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானம்’

நாட்டில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படும் நிலையொன்று ஏற்பட்டுள்ளது.குறிப்பாக ஒட்சிசன் அவசியப்படும் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தில் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.ஆகவே இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசன் முழுமையாக கொவிட் வைரஸ் தொற்றாளர்களுக்கு பயன்படுத்த வேண்டிய நிலையொன்று உருவாகியுள்ளதாக ஒளடத உற்பத்திகள்,விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேவைக்காக இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து ஒட்சிசன் பெற்றுக் கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள கொவிட் செயலணி கூட்டம் அர்த்தமற்றது எனவும்,செயலணியை கலைக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் கூறினார்.

இது முழுமையாக தவறான கருத்தாகும்.நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து கொவிட் செயலணிக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தியது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவேயாகும்.

இன்றுவரை செயலணி மூலமாக சிறப்பான வேலைத்திட்டத்தை அவர் முன்னெடுத்து வருகின்றார்.கொவிட் வைரஸ் பரவலை தடுக்கவும், ஏனைய முகாமைத்துவ தீர்மானங்களை அவரே முன்னெடுத்தார். ஆகவே அவரது சேவை உயரியது எனவும் அவர் கூறியுள்ளார்.