அரச ஊழியர்களை இரண்டு குழுக்களாக பிரித்து வேலைக்கு அழைக்கத் தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார்.
திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் ஒரு அணியையும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு அணியையும் வேலைக்கு அழைப்பதற்கு பொது நிர்வாக செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் உள்ள கர்ப்பிணித் தாய்மார் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
18 முதல் 30 வயதுடைய அரச ஊழியர்களுக்கும் விரைவாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.