இலங்கை ஒலிம்பிக் அணியின் உத்தியோகப்பூர்வ ஆடை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிக்கை ஒன்று கோரியுள்ளார்.
இம்முறை ஒலிம்பிக் சென்ற இலங்கை அணி வீரர்களுக்கு நாட்டின் தேசிய கொடியுடனான ஆடை வழங்கப்படாதமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தேசிய ஒலிம்பிக் ஆணைக்குழுவிடம் அறிக்கை கோரியுள்ளார்.
விளையாட்டு வீரர்கள் தமக்கு பொருத்தமான ஆடையுடன் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று தேசிய ஒலிம்பிக் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக, அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிட இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று டோக்கியோ சென்றது தொடர்பாகவும் சர்ச்சை ஒன்று ஏற்பட்டிருந்தது.
தான் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரனசிங்கவின் செலவில் டோக்கியோ சென்றதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.