July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சமையல் எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு!

இலங்கை முழுவதும் ‘லாஃப்ஸ்’ சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானித்தை தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்படி இந்த நிறுவனத்தின் கையிருப்பில் இருந்த எரிவாயு குறைவடைந்து வரும் நிலையில் நாடு பூராகவும் தற்போது குறித்த எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் லாஃப்ஸ் எரிவாயுவை பயன்படுத்துவோம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சில இடங்களில் லிட்ரோ எரிவாயுவை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானித்த போது, தம்மிடம் போதுமான எரிவாயு கையிருப்பில் இருப்பதால் லாஃப்ஸ் எரிவாயுவை பயன்படுத்துபவர்களுக்கு தமது எரிவாயு சிலிண்டர்களை விநியோக்கி முடியுமென்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக அண்மையில் அறிவித்திருந்தார்.

எனினும், லாஃப்ஸ் எரிவாயுக்கு பதிலாக லிட்ரோ எரிவாயு கொள்கலனை விநியோகிக்குமாறு நிறுவனத்திடமிருந்து தமக்கு எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என்று லிட்ரோ விநியோக முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் லாஃப்ஸ் எரிவாயு பாவனையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு கூடிய விரைவில் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.