இலங்கையில் சமூக ஊடகங்களை தடை செய்ய அல்லது ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘இலங்கையில் பேஸ்புக் உட்பட சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்கள் இல்லாததால் அவை தடை செய்யப்பட அல்லது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்’ என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
“நாட்டில் தற்போது நடைபெறும் விடயங்களுக்கு சமூக ஊடகங்களும் பொறுப்புக்கூற வேண்டும். அவை விடயங்களை பெரிதுபடுத்துகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், சீனாவைப் போன்ற சமூக ஊடகங்களைத் தடை செய்ய அல்லது ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அவர் பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.