
இலங்கையில் பொது போக்குவரத்து சேவைகளின் போது தனிமைப்படுத்தல் சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆராய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பஸ் போக்குவரத்தில் தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்படுகிறதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ்களில் ஆசன அளவுக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆசன அளவைவிட அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 11 பஸ் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.