இலங்கையின் இரண்டு மருத்துவமனைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இரத்தினபுரி பொது மருத்துவமனை மற்றும் கராபிடிய போதனா மருத்துவமனை என்பவற்றில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் மருத்துவமனைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா தொற்றில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளுமாறும், மருத்துவமனையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கராபிடிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், சுகாதார வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றுமாறு பணிப்பாளர் ரொட்ரிகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலைமைகளை ஆராய்ந்து, மருத்துவமனைகளில் இவ்வாறான அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவது சாதாரண விடயமாகும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமன்த ஹேரத் தெரிவித்துள்ளார்.