
File Photo
இலங்கை முழுவதும் வைத்தியசாலைகளில் தாதிமார் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் நாடு பூராகவும் 600 வைத்தியசாலைகளில் இந்தப் போராட்டம் இடம்பெறும் என்று அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து சுகாதார ஊழியர்களையும் கட்டாயமாக பணிக்கு அழைப்பது தொடர்பாக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
”தற்போதைய கொவிட் நிலைமையில் அனைத்து ஊழியர்களும் பணிகளில் இருப்பது ஆபத்தானது. சுகாதார அமைச்சுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம். ஆனால் தீர்வுகளை முன்வைக்காத காரணத்தினாலேயே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்” என்று சமன் ரத்னப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சிறுவர் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்திசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை ஆகியனவற்றில் இந்தப் போராட்டம் இடம்பெறாது என்பதுடன், கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் ஆர்ப்பாட்டங்கள் மாத்திரம் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.