கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் திறைசேரிக்கு சொந்தமான 50 வீத பங்குகளில் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக சூரிய சக்தி,காற்று, நீர் மின் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இது நாட்டின் முழுமையான மின் உற்பத்தி அதிகாரத்தை அமெரிக்காவிற்கு கொடுக்கும் நோக்கத்தை கொண்டதல்ல எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளர்.
நேற்றைய தினம் பாராளுன்றத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தினூடாக எரிவாயு மற்றும் மின்சார உற்பத்தி போன்றவை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்மானம் கேள்வி மனுக்கோரலுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. இதில் சந்தேகங்களை கொண்டு குழப்பமடைய வேண்டிய அவசியம் இல்லை என அவர் எதிர்க்கட்சிக்கு தெரிவித்துள்ளார்.
இதனால் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஏனெனில் பெரும்பான்மையான பங்கு தேசிய நிறுவனங்களிடமே உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.