கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளைய தினத்தில் இடம்பெறவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதன்படி இதுவரையில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் இருப்பின் கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, தேசிய தொற்று நோய் ஆராய்ச்சி வைத்தியசாலை, அவிசாவளை வைத்தியசாலை மற்றும் விகாரமஹாதேவி பூங்கா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி நிலையங்களில் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
நாளை காலை 8.30 மணியில் இருந்து அங்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்று சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.