May 29, 2025 12:13:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது!

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 26 ஆண்களும் 16 பெண்களும் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதிபர் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் வாகன பேரணி மூலம் கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, ஜனாதிபதி செயலகத்துக்கான வீதியை குறுக்கிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் 10 வாகனங்களையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.