January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிரியர்களின் வாகன பேரணியால் கொழும்பு வீதிகளில் நெரிசல்

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வாகன பேரணியால் கொழும்பு வீதிகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கக் கோரி மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களில் ஒரு பகுதியாக இந்த வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட வாகன பேரணியால் கொழும்பில் இருந்து கண்டி, நீர்கொழும்பு, ஹைலெவல் வீதி மற்றும் காலி வீதி உட்பட பல்வேறு வீதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கண்டி, நீர்கொழும்பு மற்றும் காலி வீதிகளின் ஊடாக இந்த வாகன பேரணி கொழும்பை வந்தடைந்துள்ளது.