மாகாண எல்லைகளைக் கடந்து பயணிக்க முடியுமானோர் தொடர்பாக பொலிஸார் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளனர்.
அரச ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அழைக்கப்பட்டவர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரே மாகாண எல்லைகளைக் கடந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மருத்துவ தேவைகளுக்காகவும், நெருங்கிய உறவினர்களின் மரணத்தின் போதும் மாகாண எல்லைகளைக் கடந்து பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான வழிகாட்டல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.