கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் தாம் முன்வைத்துள்ள யோசனைகள் சட்டமூல திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் யோசனைகள் சட்டமூல திருத்தத்தில் உள்வாங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் சுதந்திர கட்சியால் நியமிக்கப்பட்ட குழுவின் யோசனைகளின் பிரதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்,சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.