January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை ஆராய தயார் என்கிறது அரசாங்கம்

வெளிநாடு வாழ் இலங்கையர்கள் வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக அனுமதியை வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ள முன்மொழிவை அரசாங்கம் பரிசீலிக்குமென இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த இது தொடர்பில் வழங்கிய முன்மொழிவை அடுத்து அமைச்சர் கப்ரால் இவ்வாறு கூறியிருந்தார்.

வாகன இறக்குமதி தடை மூலம் அரசாங்கத்தால் நிதியை சேமிக்க முடிந்தது என்பது உண்மைதான்.எவ்வாறாயினும்,வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள் ஒரு வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் தற்காலிக வசதியை ஏற்படுத்துவதன் மூலம் கூடுதல் டொலர்களை எம்மால் சேமிக்க முடியும்.

2020 ஆம் ஆண்டில் கடனை செலுத்த முடியாதென கூறினர். 2021 இல் கடனை செலுத்த முடியாதென்றனர். தற்போது 2022 அல்லது 2023 இல் கடனை செலுத்த முடியாது போகுமென கனவு காண்கின்றனர்.2005 ஆம் ஆண்டு மொத்த வருமானத்தில் 85 வீதத்தை கடனாக செலுத்திய நிலையை முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ 71 வீதமாக மாற்றியிருந்தார்.