உலகில் பலமான நாடாகவுள்ள அமெரிக்காவில் கூட இரண்டு விதமான தடுப்பூசிகளையே வழங்க முடிந்துள்ள நிலையில்,எம்மால் ஐந்து விதமான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க முடிந்துள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொவிட் தொற்றுக்கு தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதே அனைத்து நாடுகளுக்கும் இதிலிருந்து மீள்வதற்கு உள்ள ஒரே வழியாகும். தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பது அரசாங்கமென்ற ரீதியில் எமது கடமையாகும்.
தடுப்பூசியை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவர அரசாங்கத்திடம் நிதியில்லையென எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். என்றாலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் அந்த பொறுப்பை சிறப்பாக செய்தனர்.ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.
நாட்டில் தற்போது பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆசிரியர்கள் வீதிகளில் அதிகளவானவர்களை திரட்டி சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது போராட்டங்களை நடத்தி வருகின்றார். ஜோசப் ஸ்டாலின் நாட்டில் அடுத்த கொரோனா கொத்தணியை உருவாக்கும் செயல்பாட்டையே முன்னெடுத்து வருகின்றனர்.ஆசிரியர்களின் சம்பள விவகாரத்தை அரசியலாக்கியுள்ளனர்.கொவிட் சவாலை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். இதில் வெற்றி கொள்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.