ரிஷாத் பதியுதீனுக்கும் பிள்ளைகள் உள்ளனர்.அவர்களுக்கு பெற்றோர்கள் என்ற உணர்வு இல்லையா?அவர்களின் வீட்டில் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறுகின்றது என்பது தெரிந்து கொண்டும் எப்படி அவர்களால் வேடிக்கை பார்க்க முடிந்தது. ஹிசாலினியின் மரணத்திற்கு அவரது பெற்றோர்,ரிஷாத் பதியுதீன் மற்றும் குற்றவாளிகள் சகலரும் பொறுப்புக் கூறியாக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சிறுவர் வன்கொடுமைகள் நிறுத்தப்படும் ஆண்டாக இந்த ஆண்டு உள்ள நிலையில்,இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவர் பணிக்கு அமர்த்துதல் ஒரு பேரலையாக உருவாகியுள்ளது.அப்பாவி சிறுமி ஒருவரின் மரணம் இன்று நாட்டில் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.அந்த சிறுமி எவ்வாறு இறந்தார் என்பது எமக்கு தெரியவில்லை.ஆனால் சர்வதேச ரீதியிலும் இது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் காரணியாகும்.
ஹிசாலினியின் மரணம் குறித்த விசாரணைகள் அடுத்த இரண்டு வாரங்களில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க நடவைக்கை எடுக்க வேண்டும்.
சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை கறுப்புப் பட்டியலில் போடும் முறைமையொன்று உருவாக வேண்டும். மன நோயாளர் பட்டியலில் அவர்களை இணைக்க வேண்டும். அவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும். தமது பிள்ளைகளிடம் கூட அவர்கள் செல்ல முடியாத சட்டமொன்று கொண்டுவர வேண்டும்.வெளிநாடுகளில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.அதனையே இங்கு கொண்டுவர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.