January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எமது மக்களுக்கு தீர்வு வேண்டுமே தவிர அரசாங்கத்தை கவிழ்ப்பது எங்களது நோக்கம் இல்லை’

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதோ நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதோ எமது நோக்கம் அல்ல.எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பிரதான நோக்கமே எமக்கு உள்ளது எனவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டுக்கான முதலீடுகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக ஒரு தொலைபேசி அழைப்பில் நூறாயிரம் கனேடிய டொலர் முதலீட்டை நாளையே என்னால் பெற்றுக் கொடுக்க முடியும். ஒரு தொலைபேசி அழைப்பில் அதனை என்னால் செய்து காட்ட முடியும். இவ்வாறு எம்மால் பல முதலீட்டாளர்களை கொண்டு வர முடியும். ஆனால் அதனை செய்ய விடாது பிள்ளையான் தடுக்கின்றார்

ஹிஷாலினியின் மரணத்தை சாட்டாக வைத்துக் கொண்டு மலையக தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் முரண்பட வைத்து கலவரம் ஒன்றினை உருவாக்கி அதனை அடக்குவதாக சிங்கள மக்களை ஏமாற்றி திருப்திப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் கையாண்டிருக்கும். நல்லவேளை நாட்டில் தேர்தல் ஒன்று இல்லை, அதேபோல் கொவிட் தடுப்பூசி திட்டம் அரசாங்கத்தை கைகொடுத்து வருவதால் இது நடக்கவில்லை. அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். அதை விடுத்து அமைச்சர்களே போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.