விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரும், அவருடன் தொடர்பை பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, தாம் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சு அலுவலகத்தின் சில அதிகாரிகளுக்கு கொவிட் தொற்றுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதியாகாத போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாம் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக அமைச்சர் குறித்த பதிவில் கூறியுள்ளார்.
இதேவேளை, வலுசக்தி அமைச்சு அலுவலகம் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாகவும் அலுவலகத்தை தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.