January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிதி கையிருப்பில் இருக்கிறது’: அரசாங்கம்

இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான வெளிநாட்டு நிதி கையிருப்பில் இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், இணை அமைச்சரவைப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி தடைப்படும் ஆபத்து இருக்கிறதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்கும் போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், இறக்குமதிக்கு போதுமான நிதி கையிருப்பில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.