July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2021 வாக்காளர் பட்டியலில் இணையத்தின் ஊடாக பெயர்களை பதியும் திட்டம் அறிமுகம்!

2021 வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்கும் திட்டத்தை இலங்கை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

அதன்படி, இணையத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அது தொடர்பான மேலதிக தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவின் www.election.gov.lk என்ற இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த புதிய முறை ஊடாக 2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட தகுதியுடைய 18 வயது நிரம்பிய இலங்கை குடிமக்கள் விண்ணப்பிக்க முடியும்.

அத்தோடு, பெயர் மாற்றம் அல்லது தங்களின் பெயர்களில் எழுத்துப் பிழைகள் காரணமாக 2020 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்படாத வாக்காளர்களின் பெயர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் eservices@election.gov.lk என்ற மின் அஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆணைக்குழு தெரிவிக்கிறது.