January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீகொடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 மாத குழந்தை உட்பட மூவர் பலி!

(File photo)

இலங்கை மீகொடை – வட்டரெக சந்தியில் இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 மாத குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

முச்சக்கர வண்டியும், பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது குழந்தையும் அதன் தாய் மற்றும் பாட்டியும் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தில், 5 மாத குழந்தையும் குழந்தையின் பாட்டியும், முச்சக்கரவண்டி சாரதியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அத்தோடு பலத்த காயங்களுக்கு உள்ளான குழந்தையின் தாயார், களுபோவில மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.