January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொத்தலாவல சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயார்’: அமைச்சரவைப் பேச்சாளர்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் குறித்த தீர்மானத்தை அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவித்துள்ளார்.

கொத்தலாவல சட்டமூலம் தொடர்பாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, அவசியமான திருத்தங்களை செய்வோம் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கலந்துரையாடல்களை நடத்தி, நாட்டின் இலவசக் கல்விக்கு பாதிப்பில்லாதவாறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.