இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு பொருத்தமான தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, சினோபார்ம் தடுப்பூசிகள் ஏற்றுக்கொள்ளப்படாத நாடுகளுக்கு, அந்தந்த நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் செலுத்தப்படும் சினோபார்ம் தடுப்பூசியை சில நாடுகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவ்வாறான நாடுகளுக்கு செல்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்ட போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தொழில் அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளதாகவும் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு அந்தந்த நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.