May 29, 2025 22:40:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விஹாரமஹாதேவி பூங்காவின் தடுப்பூசி மையத்திற்கு விஜயம்!

இலங்கை இராணுவத்தினரால் விஹார மஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி மையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (02) இரவு பார்வையிட்டுள்ளார்.

“அஸ்ட்ரா செனிகா” தடுப்பூசியின் 2 வது டோஸை மக்களுக்கு விரைவாக வழங்கும் நோக்கில் இந்த தடுப்பூசி மையம் இராணுவத்தினரால் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் 244,251 பேர் “அஸ்ட்ரா செனிகா” வின் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளனர்.

ஒரு பகுதி “அஸ்ட்ரா செனிகா” தடுப்பூசி டோஸ்கள் நேற்று (02) கேகாலை மாவட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் போது தடுப்பூசி திட்டத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவும் கலந்து கொண்டிருந்தார்.