இந்து சமூத்திரத்தின் அந்தமான் – நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் இன்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று காலை 9.12 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
95 கிலோ மீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவில் 6.1 ஆக இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என்றும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நிலநடுக்கத்தால் குறிப்பிட்ட பிரதேசங்களில் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.