
File Photo
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இலங்கை முழுவதும் அரச வைத்திசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி இன்று காலை முதல் 48 மணி நேரத்திற்கு இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமை, இடமாற்றம் வழங்கப்படாமை, விசேட கொவிட் விடுமுறையை வழங்காமை உள்ளிட்ட பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சுகாதார கனிஷ்ட ஊழியர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் இந்தப் போராட்டம் நடத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.