அதிபர்கள்,ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கு 56 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உள்ளது.எனினும், அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு 56 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது..
திங்கட்கிழமை (02) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதிபர்கள்,ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்தோம்.இங்கு விவாதிக்கப்பட்ட விடயங்களை வைத்துக் கொண்டு நிலைமையை அவர்களுக்கு விளக்க முடிவு செய்திருக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.