
கொவிட்- 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கையின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இலங்கையைப் பாராட்டியுள்ளார்.
கொவிட் வைரஸ் பரவலில் இருந்து விடுபடும் விதத்தில் மக்கள் தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை நாளாந்தம் 5 இலட்சம் வரையான தடுப்பூசியை ஏற்றி, தடுப்பூசி விநியோகத்தை துரிதப்படுத்தியுள்ள நிலையிலேயே, அவர் வாழ்த்தியுள்ளார்.
“செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் தடுப்பூசி ஏற்றும் இலக்கின் கீழ், இலங்கை அரசாங்கம் அதன் மக்கள் தொகையில் 10 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றியுள்ளதை கண்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
இவ்வாறான முயற்சிக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இலங்கை மக்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேபோன்று, கொவிட் வைரஸ் பரவலில் இருந்து விடுபடும் விதத்தில் மக்கள் தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் செயற்பட நடடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.