July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீட்டுப் பணியாளர்களை பாதுகாப்பதற்கான பரிந்துரைகளை தொழில் அமைச்சரிடம் கையளித்தார் சுரேன் எம்.பி.

இலங்கையில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் தற்போது காணப்படும் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளித்துள்ளார்.

தொழில் அமைச்சரின் அலுவலகத்தில் சுரேன் எம்.பி. குறித்த பரிந்துரைகளைக் கையளித்துள்ளார்.

வீட்டுப் பணியாளர்களுடைய குறைந்தபட்ச வயதினை 18 ஆக ஆக்குதல், 85,000 வரையுள்ள வீட்டுப் பணியாளர்களை பதிவு செய்தல், வீட்டுப் பணியாளர்களுக்கு ஆயுள் காப்புறுதி- ஊழியர் சேமலாம நிதியத்தை உருவாக்குதல், இஷாலினி- 189 எனும் வீட்டுப் பணியாளர் அவசர சேவை இலக்கத்தினை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட பரிந்துரைகளை கலாநிதி சுரேன் ராகவன் சமர்ப்பித்துள்ளார்.