வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அவரது உத்தியோகப்பூர்வ வீட்டை பொது நிர்வாக அமைச்சுக்கு திருப்பிக் கையளித்துள்ளார்.
முன்னாள் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அந்த வீட்டில் குடியிருந்த காரணத்தினால், இவ்வாறு வீட்டைத் திருப்பிக் கையளிக்கத் தீர்மானித்ததாக அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வீட்டில் இளம் வயது சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பயன்படுத்திய உத்தியோகப்பூர்வ வீடொன்றில் இரண்டு அறைகள் சந்தேகத்தின் பேரில் மூடி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
குறித்த வீட்டை 21 மில்லியன் ரூபாய் செலவிட்டு, நவீனமயப்படுத்துவதிலும் தனக்கு இணக்கம் இல்லை என்று அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார்.