கொரோனா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்குவது தொடர்பாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்று சுகாதார சேவைகள் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்புக்கான மிகவும் பொதுவான வழிமுறை தொடர் தடுப்பூசி ஏற்றம் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமன்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளும் மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையும் மூன்றாவது டோஸ் வழங்குவது குறித்து ஆராய்வதாகவும், அதற்குத் தயாராகி இருப்பது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.