இலங்கையின் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் காலி மாவட்ட கூட்டம் நடைபெற்ற போது, பிரதேச சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, இவ்வாறு வேண்டிக்கொண்டுள்ளனர்.
தமது வேண்டுகோளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இதுவரையில் பதிலளிக்கவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.