January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநாவுடன் பணியாற்றும் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது

ஐநாவுடன் பணியாற்றும் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.

அமைதி, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றும் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதற்காக பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் ஐநாவுடன் தாம் இணைந்து பணியாற்ற கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.