January 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அமைச்சின் கீழ் இருந்த துறைசார் நிறுவனங்களை நீக்கியதில் பிரச்சினை இல்லை’: சரத் வீரசேகர

தனது அமைச்சின் கீழ் இருந்த நிறுவனங்கள் நீக்கப்பட்டது தொடர்பில், தனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சின் கீழ் இருந்து நிறுவனங்கள் நீக்கப்படுவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தன்னிடம் ஏற்கனவே கலந்துரையாடியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் திட்டங்களுக்கு தனது அமைச்சின் கீழ் இருந்த நிறுவனங்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்பதால், அவை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும் சரத் வீரசேகர விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஸ்ரீலங்கா பொலிஸ் மற்றும் தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனம் ஆகியன மட்டுமே எஞ்சியுள்ளன.