
இலங்கையில் அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைப் போல் இயங்க ஆரம்பித்துள்ளன.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அரச நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களே பணிகளுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் அனைத்து ஊழியர்களையும் அழைப்பதற்கு பொதுநிர்வாக அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்படி இன்றைய தினத்தில் அரச ஊழியர்கள் வழமைப் போன்று பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.
சுகாதார ஒழுங்கு விதிகளை முறையாக பின்பற்றி சமூக இடைவெளியுடன் பணிகளை முன்னெடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அனைத்து ஊழியர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாட்டை தொடர நடவடிக்கையெடுத்துள்ள போதும், பணிகளுக்கு செல்லும் ஊழியர்களுக்காகவென மாகாணங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.