May 23, 2025 23:37:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை பெற்றுக் கொள்ள இணைய வழிமுறை அறிமுகம்!

பிறப்பு, திருமணம் அல்லது மரண சான்றிதழ்களின் பிரதிகளை நாளை முதல் (02) இணையத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிரதிகளை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்ப படிவங்களை கைத்தொலைபேசி அல்லது கணினி ஊடாக பூர்த்தி செய்ய முடிவதுடன், இதற்கான கட்டணங்களையும் இத்திரனியல் அட்டைகள் மூலம் செலுத்த முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தோடு இவ்வாறு விண்ணப்பிக்கப்படும் சான்றிதழ்களின் பிரதிகளை, தபால் மூலமாகவோ அருகில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவிலோ பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பதிவாளர் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதற்கான கோரிக்கைகளை https://online.ebmd.rgd.gov.lk/ என்ற இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடிவதுடன், மேலதிக தகவல்களை www.rgd.gov.lk இணையத்தளம் ஊடாகவும் 011 2889518 என்ற தொலைபேசி எண் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.