முன்னிலை சோசலிச கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான தற்போதைய அரசியல் நிலைமை குறித்து இன்று (01)விவாதிக்கப்பட்டது.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இந்த விவாதம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் சமீரா கொஸ்வத்த, ரவீந்திர முதலிகே மற்றும் புபுது ஜயகொட ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், ஆசிரியர்களின் போராட்டம், உரம் பிரச்சினை,கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் புவிசார் அரசியல் பதட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.